Sunday, October 29, 2017

அநுராதபுரகால ஆட்சியாளர்கள்

           அனுராதபுர ஆட்சியாளர்கள்

அனுராதபுரத்தினை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்கள் பற்றி நோக்குமிடத்து, அனுராதபுர இராசதானியானது மிக நீண்ட காலம் நிலைபெற்றிருந்தமையினால் ஏராளமான மன்னர்கள் அதனை ஆட்சி செய்தனர் என்பது நோக்கத்தக்கது.

அனுராதபுரத்தினை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னர்களினை பட்டியல்படுத்தி நோக்குவது இலங்கை வரலாற்றின் தொடர் தன்மையினை அறிய அவசியமாகின்றது.

முதல் மன்னனாக நோக்கப்படுபவன் பண்டுகாபயனாவான். இவன் கி.மு 437இல் முதல் உத்தியோகபூர்வ தலைநகரமாக அனுராதபுரத்தினை தெரிவுசெய்து ஆட்சி செய்தான். இவனிற்குப் பின் அவனது மகனான மூத்தசிவன் கி.மு 367இலும், அவனது மகனான தேவநம்பிய தீசன் கி.மு 307 இலும் ஆட்சி செய்தனர்.

அதன் பின் உத்தியன்  கி.மு 267 இலும் , மகாசிவன் கி.மு 257 இலும் , சூரதீசன் கி.மு 247 இலும் முறையே ஆட்சி செய்தனர்.அதனைத் தொடர்ந்து அந்நிய நாட்டவர்களான குதிரை வியாபாரிகளாக வந்து ஆட்சியினைக் கைப்பற்றிய சேனனும் குத்திகனும் கி.மு 237இல் ஆட்சியக் கைப்பற்றினர்.

சேனன் , குத்திகன் என்ற அந்நிய நாட்டவர்களிடமிருந்து ஆட்சியினை அசேல மன்னன் கி.மு 215 இல் கைப்பற்றியாண்டான். அசேலனைக் கொன்று சோழ மன்னனான எல்லாளன் கி.மு 205இல் ஆட்சியினைக் கைப்பற்றி 44 ஆண்டுகள் இலங்கையினை ஆட்சி செய்தான்.

எல்லாளனைக் கொன்று துட்டகாமினி கி.மு161 இல் ஆட்சியினை முன்னெடுத்தான். இவனின் பின்னர் சத்தாதீசன், தூலத்தனன், இலஞ்சதீசன், காலாட்நாகன் ஆகிய மன்னர்களும் ஆட்சி செய்தனர்.

அதன் பின்னர் வட்டகாமினி அல்லது வலகம்பா (கி.மு104) ல் ஆடசியை அமைத்தான். இவனிற்கு பின்னர் ஐந்து தமிழ் அரசர்கள்  (கி.மு 103 - கி.மு 88) ஆட்சி செய்தனர்.பின்னர் தமிழ் அரசனிடமிருந்து மீண்டும் ஆட்சியினை வட்டகாமினி கைப்பற்றி கி.மு 88 முதல் ஆட்சியினைத் தொடர்ந்தான்.

அதன் பின்னர் மகாசூளி மகாதீசன்(கி.மு 76) இலும் , சேரநாகன் (கி.மு 62) இலும்  தீசன்(கி.மு 50), சிவன் தாருபாதிகதீசன் (கி.மு 47), அனுலா குடகன்னதீசன் (கி.மு 42), பாதிகாபயன்(கி.மு 20), மகாத்திக மகாநாகன் (கி.மு 9), ஆமந்த காமினி (கி.மு 21), கனிரசானுதீசன், சூலாபாயன், சீவலி முதலியோர் ஆட்சி செலுத்தினர்.


பின்னர் வசபன் கி.மு 66ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தான். அதனைத் தொடர்ந்து கி.மு 66 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தான். பின்னர் வங்கனாசிகதீசன்(கி.பி 110) லும் 1ஆம் கஜபாகு (கி.பி 113) லும்  மகல்லநாகன் (கி.பி 135), பாதிகதீசன்(கி.பி 141) ம் ஆட்சி செலுத்தினர்.

அடுத்து கனிட்டதீசன், குச்சநாகன், குஞ்சநாகன், 1ஆம் சிறீநாகன், வோகரிக்கதீசன், அபயநாகன், 2ஆம் சிறிநாகன், விஜயகுமாரன், சங்கதீசன், சங்கபோதி (சிறிசங்கபோ), கோதகாபயன், 1ஆம் சேட்டதீசன் ஆகியோர் (கி.பி 165 - 277வரையும் ஆட்சி செலுத்தினர்.

பின்னர் மகாசேனன் (கி.பி 277) ம் , சிறீ மேகவண்ணன், 2ஆம் சேட்டதீசன், புத்ததாசன், உபதீசன், மகாநாமன், சோதிசேனன், சத்தகாகன், மித்தசேனன் ஆகிய மன்னர்கள் (கி.பி 301- 435) வரையும்,அதன் பின்னர் ஆறு தமிழர்கள் ஆட்சிசெய்தனர்.

கி.பி 463 ஆம் ஆண்டு தமிழ் அரசனிடமிருந்து ஆட்சியினைக் கைப்பற்றி தாதுசேன்னன் ஆட்சிபுரிந்தான். அவனிற்கு பின்னர் மகனான காசியப்பன்(கி.பி 479 - 527 ) வரை கிகிரியாவை ஆட்சி செய்தான்.

பின்னர் 1ஆம் மொகலான (கி.பி 497), குமார தாதுசேனன், கீர்த்திசேனன், சிவன், உபதீசன், அம்பசாமநேர சிலாகால, தாதாப்பபூதி, 2ஆம் மொகலானா, கீர்த்தி ஸ்ரீமேகவண்ணன், மகாநாகன் ஆகியோர் (கி.பி 515 - 561) வரைக்கும் , பின்னர் 1ஆம் அக்கபோதி (கி.பி 564) ம் , 2ஆம் அக்கபோதி (கி.பி598) ம் ஆட்சி செய்தனர்.

சங்கதீசன், தல்லமொகலானா, சிலாமேகவண்ணன், 3ஆம் அக்கபோதி, 3ஆம் சேட்டதீசன், 3ஆம் அக்கபோதி(மீண்டும் ஆட்சி), தாதோபதீசன், 2ஆம் காசபன், 1ஆம் த்ப்புலன், 2ஆம் தாதோபதீசன், 4ஆம் அக்கபோதி, தத்தன், உண்ணனாகர அத்ததாத, மானவரம்மன், 5ஆம் அக்கபோதி, 3ஆம் காசபன், 1ஆம் மகிந்தன், 6ஆம் அக்கபோதி, 7ஆம் அக்கபோதி, 3ஆம் காசியப்பன், 2ஆம் மகிந்தன், 2ஆம் தப்புலன், 3ஆம் மகிந்தன், 8ஆம் அக்கபோதி, 3ஆம் தப்புலன், 9ஆம் அக்கபோதி, 1ஆம் சேனன், 2ஆம் சேனன், 1ஆம் உதயன், 4ஆம் காசியப்பன், 5ஆம் காசியப்பன், 4ஆம் த்ப்புலன், 2ஆம் உதயன், 3ஆம் சேனன், 3ஆம் உதயன், 4ஆம் சேனன், 4ஆம் மகிந்தன், 5ஆம் சேனன் ஆகியோர் (கி.பி 608 - 1001) வரைக்கும் ஆட்சி செய்தனர்.

பின்னர் ஆட்சிப்பீடம் ஏறிய 5ஆம் மகிந்தன்  அனுராதபுர இராசதானியின் இறுதி மன்னனாவான். பின்னர் ராஜராஜ சோழனது ஆதிக்கம் இலங்கையில் ஏற்பட்டமையினைத் தொடர்ந்து இராசதானி பொலனறுவைக்கு இடம் மாற்றப்பட்டது.
                                                                   
                                  Presented by M.M.M.HAZEEM

No comments:

Post a Comment